‘Sawadeeka‘ பாடல் ட்ரெண்டிங் நம்பர் 1 இல் இருக்கிறது.
அஜித் மற்றும் திரிஷா ஆகியோரின் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே சமயம் நேற்று (டிசம்பர் 27) இந்த படத்தில் இருந்து ‘Sawadeeka’ எனும் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அனிருத் மற்றும் ஆண்டனி தாசன் ஆகியோர் பாடியிருந்த இந்த பாடல் வரிகளை தெருக்குரல் அறிவு எழுதியிருந்தார். இந்த பாடலில் வித்தியாசமான வார்த்தைகளிடம் பெற்றிருந்தன. இந்நிலையில் இந்த பாடல் இணையத்தில் செம வைரலாகி வரும் நிலையில் யூடியூபில் ட்ரெண்டிங் நம்பர் 1 இல் இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்து. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இதில் அஜித்,திரிஷா ஆகியோருடன் இணைந்து அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.