Homeசெய்திகள்சினிமா'சவதீகா' வீடியோ பாடல் இணையத்தில் வெளியீடு!

‘சவதீகா’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியீடு!

-

- Advertisement -

சவதீகா வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.'சவதீகா' வீடியோ பாடல் இணையத்தில் வெளியீடு!

அஜித்தின் 62 ஆவது படமாக உருவாகியிருந்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கலைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்திருந்தார். அனிருத்தின் இசையிலும் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவிலும் இந்த படம் வெளியானது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹாலிவுட் படத்தை தழுவி ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் சில ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். எந்த விட பில்டப்பும் இல்லாமல் நடிகர் அஜித் புதிய முயற்சியை எடுத்து இருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

2025 மார்ச் முதல் வாரத்தில் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘சவதீகா’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படம் வெளியாவதற்கு முன்பாக இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கியது குறிப்பிடத்தக்கது.

MUST READ