செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். எதார்த்தமான காதல் கதையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. எனவே இந்த வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இந்த படத்தில் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.
நடிகை அனஸ்வரா ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். ராம்ஜி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படம் குறித்து சில தகவல்களை செல்வராகவன் சமீபத்தில் நடந்த பேட்டியில் பகிர்ந்து உள்ளார்.
“#7GRainbowColony2 shooting has been 50% completed. I’m going to take same Kathir’s story 10 years after♥️. We have a clue at the end of Part-1, what’s going to happen on Part-2😀. We are finding it very difficult to release small film now”
– Selvaraghavanpic.twitter.com/DxcBCgUy5J— AmuthaBharathi (@CinemaWithAB) April 5, 2025
அதன்படி, “7ஜி ரெயின்போ காலனி படத்தின் படப்பிடிப்பு 50% முடிவடைந்துவிட்டது. 10 வருடங்களுக்குப் பிறகு அதே கதிரின் கதையை எடுக்கிறேன். முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான க்ளூ இருக்கும். பெரிய படங்களுக்கு நடுவில் இதுபோன்ற சிறிய படங்களை ரிலீஸ் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.