Homeசெய்திகள்சினிமாபொங்கலுக்கு செம ட்ரீட்..... கடும் போட்டியில் பெரிய ஹீரோக்களின் படங்கள்!

பொங்கலுக்கு செம ட்ரீட்….. கடும் போட்டியில் பெரிய ஹீரோக்களின் படங்கள்!

-

பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் படங்கள்….. மிஸ் பண்ணிடாதீங்க!

கேப்டன் மில்லர்

தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுசுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் இப்படம் உருவாகி உள்ளது. பொங்கலுக்கு செம ட்ரீட்..... கடும் போட்டியில் பெரிய ஹீரோக்களின் படங்கள்!சமீபத்தில் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

அயலான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படம் அயலான். ஏலியன் ஒன்றை மையமாக வைத்து சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இடம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு செம ட்ரீட்..... கடும் போட்டியில் பெரிய ஹீரோக்களின் படங்கள்!கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே

அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருண் விஜய், நிமிஷா சஜயன், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை ஏ எல் விஜய் இயக்கியுள்ளார். பொங்கலுக்கு செம ட்ரீட்..... கடும் போட்டியில் பெரிய ஹீரோக்களின் படங்கள்!சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியான நிலையில் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

மெரி கிறிஸ்மஸ்

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் ஆகியோரின் கூட்டணியில் மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. சைக்காலஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு செம ட்ரீட்..... கடும் போட்டியில் பெரிய ஹீரோக்களின் படங்கள்!ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

குண்டூர் காரம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்துள்ள படம் குண்டூர் காரம். இந்த படத்தை திரிவிக்ரம் இயக்கியுள்ளார். கமர்சியல் படமாக உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.பொங்கலுக்கு செம ட்ரீட்..... கடும் போட்டியில் பெரிய ஹீரோக்களின் படங்கள்! நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

ஜர்னி – வெப் தொடர்

பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் இயக்கியுள்ள வெப் தொடர் தான் ஜர்னி. இதில் சரத்குமார், கலையரசன், பிரசன்னா, திவ்யபாரதி, ஆரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு செம ட்ரீட்..... கடும் போட்டியில் பெரிய ஹீரோக்களின் படங்கள்!இந்த தொடர் ஜனவரி 12ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

MUST READ