Homeசெய்திகள்சினிமாசென்சாருக்கு ஓகே சொன்ன நெட்பிளிக்ஸ்... ஓடிடி ரசிகர்கள் அதிர்ச்சி...

சென்சாருக்கு ஓகே சொன்ன நெட்பிளிக்ஸ்… ஓடிடி ரசிகர்கள் அதிர்ச்சி…

-

- Advertisement -
மற்ற ஓடிடி தளங்கள் மத்தியில் சென்சார் செய்யப்படாத படைப்புகளை அதிகம் வெளியிடும் நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்திய திரைப்படங்களை பொறுத்தமட்டில் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

ஓடிடி தளங்களின் தனித்துவமே, தணிக்கைக்கு அப்பாற்பட்ட அதன் உண்மையான படைப்புதான். வன்முறை, பாலியல், வசவு சொற்கள், போதை பயன்பாடுகள் என வழக்கத்தில் நாம் திரையில் காண வாய்ப்பில்லாத காட்சிகளை அப்பட்டமாக ஓடிடி தளங்கள் காட்சிப்படுத்தும். படைப்பின் வீரியத்தை பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்த ஒரு ஊடகமாக ஓடிடி தளங்கள் செயல்படுகின்றன. ஓடிடி தளங்களின் இந்த போக்குக்கு இந்தியாவில் முட்டுக்கட்டை விழுந்தது. அரசின் நெருக்கடி மற்றும் சினிமா ஆர்வலர்களின் நெருக்கடி காரணமாக தணிக்கை செய்யப்பட்ட படைப்புகளை வெளியிடும் கட்டாயத்துக்கு நெட்ஃபிளிக்ஸ் ஆளானது.

வழக்கமாக இந்தியாவுக்கு வெளியே உள்ள பார்வையாளர்களுக்கு திரைப்படத்தின் தணிக்கை செய்யப்படாத பதிப்பையே நெட்ஃபிளிக்ஸ் வழங்கும். ஆனால், வன்முறை, பாலியல் காட்சிகள் மட்டுமன்றி, அதிகாரத்துக்கும், அரசியலுக்கும் சர்ச்சைகளை கூட்டக்கூடிய காட்சிகளை தடை செய்து தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை மட்டுமே ஒளிபரப்பு செய்ய தணிக்கையானதன் பதிப்பையே ஒளிபரப்ப நெட்ஃபிளிக்ஸ் முன்வந்துள்ளது. இதற்கு அரசின் நெருக்கடி காரணமா என வெளிப்படையான தகவல் ஏதும் இல்லை.

இதன் விளைவாக, தணிக்கை வாரியம் தந்த பதிப்பையே சர்வதேச அளவில் காட்சிக்கு வழங்கும் முடிவுக்கு நெட்ஃபிளிக்ஸ் வந்துள்ளது. அடுத்ததாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் படங்களில் இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், ஓடிடி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ