Homeசெய்திகள்சினிமாசின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.... கதறி அழுத தாய்!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை…. கதறி அழுத தாய்!

-

- Advertisement -

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.... கதறி அழுத தாய்!

சின்னத்திரை நடிகையான சித்ரா, சின்ன பாப்பா பெரிய பாப்பா, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் திடீரென நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் சின்னத்திரை பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.... கதறி அழுத தாய்!அதைத் தொடர்ந்து சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ராவின் பெற்றோர், சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது புகார் அளித்திருந்தனர். ஆனால் எந்தவித ஆதாரங்களும் இல்லாததால் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 31) சித்ராவின் தந்தை காமராஜ், சித்ராவின் ரூமிலேயே தற்கொலை செய்து கொண்டார். மகளின் அறையில் தனியாக தூங்கும் காமராஜ் தன்னுடைய மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னுடைய மகள் சித்ரா மறைந்ததிலிருந்தே காமராஜ் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே மகளின் பிரிவை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.... கதறி அழுத தாய்!மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் சித்ராவின் தாய் விஜயா, சித்ராவின் வழக்கில் தீர்ப்பு வந்த நாளிலிருந்தே காமராஜ் சாப்பிடாமல் இருந்து வந்ததாகவும் தற்போது அவர் தன்னை அனாதையாக்கி விட்டு சென்று விட்டதாகவும் கதறி அழுகிறார்.

MUST READ