Homeசெய்திகள்சினிமா'லியோ' இசை வெளியீட்டு விழா நடைபெறாது..... படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘லியோ’ இசை வெளியீட்டு விழா நடைபெறாது….. படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா இல்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக பட குழுவினர் வெளியிட்டு வரும் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் இசை வெளியீட்டு விழா இல்லை என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில், “சில பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். ரசிகர்களை உற்சாகப்படுத்த தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்து வருவோம். மேலும் இந்த நிகழ்ச்சி நடைபெறாததற்கு காரணம் எந்த ஒரு அரசியல் அழுத்தமும் அல்லது வேறு சில காரணங்களோ இல்லை” என்று பதிவிட்டுள்ளனர்.

MUST READ