மலையாள திரையுலகில் அன்று முதல் இன்று வரை ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது மோகன்லால் என்றே சொல்லலாம். மோலிவுட் திரையுலகம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, என பல மொழிப் படங்களில் அவர் நடித்திருக்கிறார், நடித்தும் வருகிறார். மலையாளத்தில் தற்போது 360-வது படத்தில் நடித்து வருகிறார். 15 ஆண்டுகள் கழித்து நடிகை ஷோபனா மோகன்லாலுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.
இதனிடையே, அண்மையில் கொச்சியில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் மோகன்லால் கலந்து கொண்டார். அப்போது மேடை ஏறிய அவர், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிந்தா பந்தா என்ற பாடலுக்கு நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி அசத்தினார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். தொடர்ந்து ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹூக்கும் பாடலுக்கு மேடையில் நடனமாடி செய்து அசத்தினார். இதைக் கண்ட ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
Superstar Mohanlal mesmerizing the audience with his electrifying performance on 'Zinda Banda'! 🎶@iamSRK @Mohanlal #ShahRukhKhan #SRK #Jawan #ZindaBanda #MohanLal pic.twitter.com/QQTZObD6Jd
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) April 22, 2024