ஜவான் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதை ஷாருக்கான் உறுதி செய்துள்ளார்.
தமிழில் விஜயை வைத்து பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் அட்லீ தற்போது இந்தி பக்கம் சென்று ஷாருக் கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அல்லது விஜய் இருவரில் ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது விஜய் ஜவான் படத்தில் நடித்துள்ளதை உறுதி செய்துள்ளார் ஷாருக்.
சமீபத்தில் ஜவான் படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்திய ஷாருக் கான், அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது ஜவான் படத்தில் மற்ற நடிகர்களுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த ஷாருக்கான் “அட்லீ, விஜய், நயன் ஆகியோருடன் சிறப்பான மற்றும் பரபரப்பான படப்பிடிப்பு நடந்தது. ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்தது ஷாருக்கான் உறுதி செய்ததாக தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Hectic and fun to shoot with Atlee Vijay & Nayan and everybody else. Really intense and fun. #Jawan https://t.co/NuBRDuo3vh
— Shah Rukh Khan (@iamsrk) May 6, 2023