Homeசெய்திகள்சினிமாஷாருக்கானின் டன்கி ரிலீஸ்.... திரையரங்குகளில் கோலாகல கொண்டாட்டம்...

ஷாருக்கானின் டன்கி ரிலீஸ்…. திரையரங்குகளில் கோலாகல கொண்டாட்டம்…

-

- Advertisement -
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷாருக்கானின் டன்கி திரைப்படம் திரையரங்குகளில் வௌியானது. இதனால் திரையரங்குகள் அனைத்தும் கொண்டாட்டமும், கோலாகலமும் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த ஆண்டு பாலிவுட்டுக்கு மட்டும் அல்ல பாலிவுட் கிங்கானாக கொண்டாடப்படும் ஷாருக்கானுக்கும் பிளாக்பஸ்டர் ஆண்டாக அமைந்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியானது. சித்தார்த் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் ஜவான். கோலிவுட்டின் வெற்றி இயக்குநர் அட்லீ இயக்கிய திரைப்படம் இது. படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் என உச்ச நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். மாபெரும் நட்சத்திர பட்டாளமாக உருவான ஜவான் திரைப்படம் கிட்டத்தட்ட ஆயிரத்து 100 கோடி ரூபாய் வசூலித்து இந்த ஆண்டின் மெகா ஹிட்டாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் டன்கி. ‘முன்னா பாய் எம்பிபிஎஸ்’, ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘சஞ்சு’ ஆகிய படங்களை இயக்கியவர் ஹிராணி. படத்தில் டாப்ஸி, விக்கி கவுஷல், போன் இரானி, அனில் குரோவர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. இந்நிலையில், இன்று டன்கி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வௌியானது. நகைச்சுவை அதே சமயம் சென்டிமென்டும் சரிவிகிதத்தில் கலந்து படம் உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் வருகின்றன. அதுமட்டுமன்றி பன்ச் வசனங்கள், அதிரடி ஆக்‌ஷன்கள் இல்லாமல் எதார்த்த நடிப்பால் ஷாருக்கான் ரசிகர்களை கவர்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு திரையரங்குகள் அனைத்தும் கோலாகல கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

MUST READ