Homeசெய்திகள்சினிமாஷாருக்கானின் டன்கி திரைப்படம்... ஓடிடி ரிலீஸ் அப்டேட்...

ஷாருக்கானின் டன்கி திரைப்படம்… ஓடிடி ரிலீஸ் அப்டேட்…

-

ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான ஷாருக்கானின் டன்கி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஹாட்ரிக் ஆண்டு என்று சொல்லாம். ஏனெனில், ஆண்டின் தொடக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் வெளியானது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் இத்திரைப்படம் வௌியானது. சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் இத்திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படம் வெளியானது. நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம், ஆயிரத்து 200 கோடிக்கு மேல் வசூலித்தது.

இதைத் தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள புதிய திரைப்படம் டன்கி. இதில் டாப்ஸி, விக்கி கௌசல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் இந்தி மொழியில் மட்டும் வெளியானது. இத்திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான பதான் மற்றும் ஜவான் படங்களை போல் அல்லாமல், டன்கி திரைப்படம் குறைந்த வசூலையே பெற்றது.

இந்நிலையில், டன்கி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி மாதம் 16-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

MUST READ