Homeசெய்திகள்சினிமாஅட்லியின் ஜவான் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்

அட்லியின் ஜவான் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்

-

பாலிவுட்டின் ஜாம்பவானாக கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கான். கடந்த ஆண்டில் மட்டும் ஷாருக்கான் நடித்த 3 திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன. ஆண்டின் தொடக்கத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் வெளியானது. இதில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் வெளியானது. பிரபல கோலிவுட் இயக்குநர் அட்லீ, இப்படத்தை இயக்கி பாலிவுட்டுக்கும் அறிமுகமானார்.

படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து, நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தி,தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இப்படம் ஒவ்வொரு நாளும் வசூல் சாதனையை படைத்து வந்தது. உலகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் குறிப்பாக தமிழகத்தில் 400கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளிலிருந்து உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தியது.

உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்து 200 கோடிக்கு மேல் வசூலித்த இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை ஜவான் படைத்தது. இந்நிலையில், இத்திரைப்படம் 2024-ம ஆண்டிற்கான ஆஸ்ட்ரா விருது விழாவில் திரையிட இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விருது விழா ஆஸ்திரேலியாவில் உள்ள டெலிவிஷன் அசோசியேசன் நிறுவனத்தால் வழங்கப்படும் விருதாகும்.

MUST READ