- Advertisement -
ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் டன்கி படத்தின் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜவான். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரித்தது. படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி, என அனைத்து மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. அனிருத் இசை அமைத்திருந்த இத்திரைப்படம் வசூலிலும் பின்னியது. ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள ஜவான் திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்திலும் வெளியானது.
ஷாருக்கான் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் டன்கி. இப்படத்தை ராஜ்குமார் ஹிராணி இயக்கி இருக்கிறார். படத்தில் சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா, டாப்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வௌியாகி வரவேற்பை பெற்றது. 5 நண்பர்களுடன் வௌிநாடு செல்வதை மையப்படுத்தி இத்திரைப்படம் நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகி உள்ளது.
This trailer of #Dunki is fantastic, full of emotions, comedy and thrill. It’s proof that Dunki is a sure shot hit. And SRK is brilliant in each frame as always.
pic.twitter.com/KzBMTwgJTG— KRK (@kamaalrkhan) December 5, 2023