புதிய படத்தில் ஷாருக் கான் மற்றும் ஆலியா பாட் இருவரும் ஜோடி சேர இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் இன்ஷால்லா. இந்தப் படத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவக்க உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் ஆலியா பாட் கதாநாயகியாக இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஷாருக் கான் மற்றும் ஆலியா இருவரும் ஏற்கனவே ‘டியர் ஜிந்தாகி’ படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஷாருக் கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் இருக்கின்றனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஜவான் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.