Homeசெய்திகள்சினிமாமொட்டை தலையுடன் ஷாருக்கான்.... ஹீரோவா?வில்லனா?..... தெறிக்கவிடும் ஜவான் ப்ரிவியூ!

மொட்டை தலையுடன் ஷாருக்கான்…. ஹீரோவா?வில்லனா?….. தெறிக்கவிடும் ஜவான் ப்ரிவியூ!

-

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான் படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது.

ஷாருக்கான் நடிப்பிலும் அட்லீ இயக்கத்திலும் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இப்படத்தை கௌரி கான் ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசை அமைகிறார்.
கடந்த வருடமே இந்த படத்தின் டைட்டில் அனௌன்ஸ்மெண்ட் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ஜவான் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ 2.12 நிமிடங்கள் நீண்டுள்ளது. இந்த வீடியோ முழுவதும் மிரட்டலான ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ளன. ஷாருக்கான் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது இந்த முன்னோட்ட காட்சிகளை பார்க்கும் போது ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது போன்றே
தெரிகிறது.

படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனுக்கும் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என தெரிகிறது. இந்த வீடியோவில் விஜய் சேதுபதியின் காட்சிகள் ஒரு சில இடங்களில் வந்தாலும் அவரின் வில்லன் கதாபாத்திரம் மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத்தின் பிஜிஎம் வேற லெவலில் இருக்கிறது. இந்த ப்ரிவியுவின் மூலம் படம் ஹை பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.
மேலும் ஷாருக்கானின் நான் பாவமா? புண்ணியமா? ஹீரோவா? வில்லனா? போன்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளன. கடைசியில் ஷாருக்கான் மொட்டை தலையுடன் மிக மாஸாக காணப்படுகிறார்.

இயக்குனர் அட்லீ  தனது எல்லா படங்களிலும் ஒரு சென்டிமென்ட் மற்றும் ஒரு சமூக கருத்துக்களை  வைத்திருப்பார். அதுபோல இந்த படத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறாக மிரட்டலான பின்னணி இசை உடன் கூடிய தெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஜவான்  பட முன்னோட்டமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

MUST READ