Homeசெய்திகள்சினிமாசத்தம் இல்லாமல் சம்பவம் செய்யும் ஷாருக்கான்... 'டங்கி' வசூல் விபரம்!

சத்தம் இல்லாமல் சம்பவம் செய்யும் ஷாருக்கான்… ‘டங்கி’ வசூல் விபரம்!

-

சத்தம் இல்லாமல் சம்பவம் செய்யும் ஷாருக்கான்... 'டங்கி' வசூல் விபரம்!இந்தியாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான “டங்கி” திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. எப்படியாவது லண்டன் சென்றே ஆக வேண்டும் என நினைக்கும் ஹீரோ மற்றும் அவரது நண்பர்கள் சட்டவிரோதமாக லண்டனைச் சென்றடைகிறார்கள். அவர்களுக்கு அங்கு என்ன நடந்தது அவர்கள் இந்தியாவிற்கு எப்படி திரும்பி வந்தார்கள் என்பதே டங்கி படத்தின் கதை.பொதுவாகவே ராஜ்குமார் ஹிரானியின் படங்கள் எல்லாமே ஒரு சமூக கருத்தை மிக ஆழமாக எடுத்துக் கூறும். இப்படமும் அத்தகைய ஒரு பீல் குட் படமாகவே அமைந்திருந்தது. பதான், ஜவான் என ஆக்ஷன் சரவெடிகளால் அடுத்தடுத்து 2 முறை ஆயிரம் கோடிகளை அள்ளினார் ஷாருக்கான். அந்த இரண்டு படங்களுமே பல இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.சத்தம் இல்லாமல் சம்பவம் செய்யும் ஷாருக்கான்... 'டங்கி' வசூல் விபரம்! ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் டங்கி திரைப்படம் ஹிந்தியில் மட்டுமே வெளியாகி உள்ளது. எனவே இப்படம் அனைத்து மொழிகளிலும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் போனது. இருப்பினும் இப்படம் வெளியான 3 நாட்களில் 103.4 கோடிகளை வசூல் செய்துள்ளது. பிரபாஸின் சலார் படம் பெரிய எதிர்பார்ப்போடு இப்படத்திற்கு போட்டியாக இறங்கியுள்ளது. இருப்பினும் டங்கி படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை வருவதால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூலைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ