- Advertisement -
ஜோதிகா, அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் சைத்தான் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.
திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட நடிகை ஜோதிகா, தற்போது தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி அடுத்தடுத்து நடித்து வருகிறார். 36 வயதினிலே படத்தில் தொடங்கி காற்றின் மொழி, ஜாக்பாட், மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், ராட்சசி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே, தம்பி என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பும் பெற்று வருகிறார்.
அண்மையில் அவரது நடிப்பில் மலையாளத்தில் காதல் தி கோர் என்ற திரைப்படம் வெளியானது. இதில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்திருப்பார். தமிழ், மலையாளம் மட்டுமன்றி தற்போது இந்தியிலும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். ஒரு சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது. விகாஸ் பாஹ்ல் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
Woh poochega tumse… ek khel hai, kheloge? Par uske behkaave mein mat aana! #ShaitaanTeaser out now!
Taking over cinemas on 8th March, 2024.@ActorMadhavan #Jyotika @imjankibodiwala #JyotiDeshpande @KumarMangat @AbhishekPathakk #VikasBahl @jiostudios @ADFFilms… pic.twitter.com/ZieZuKBXnI
— Ajay Devgn (@ajaydevgn) January 25, 2024