Homeசெய்திகள்சினிமாஉங்களால் ஜெயிக்க முடியாது... ஷாலினி அஜித்குமாரின் பதிவு வைரல்...

உங்களால் ஜெயிக்க முடியாது… ஷாலினி அஜித்குமாரின் பதிவு வைரல்…

-

தமிழ் ரசிகர்களால் தல என்றும் ஏகே என்றும் அன்புடன் அழைக்கப்படும் முன்னணி நடிகர் அஜித்குமார். ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வந்த அஜித்குமார், தற்போது சினிமாவை தாண்டி சுற்றுலாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு உலக சுற்றுலா செல்வதற்கான பைக் நிறுவனத்தையும் அவர் தொடங்கினார். இதைத் தொடர்ந்து பைக்கை எடுத்துக் கொண்டு உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருந்தார்.

தற்போது, அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கேயே நிறைவு செய்ய படக்குழு பணியாற்றி வருகிறது. படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

நடிப்பு மட்டுமன்றி அவ்வப்போது குடும்பத்தினருடனும் அவர் நேரம் செலவிட்டு வருகிறார். அண்மையில் அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்ததாக கூறப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில், ஷாலினி அஜித்குமாரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்குமார் அவரது மகன் ஆத்விக்கிற்கு ஷூ மாட்டிவிடுவது போல புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில், உங்களால் ஜெயிக்க முடியாது என்று நம்மிடம் சொல்லக்கூடிய ஒரே ஒருவர் அது நாம் தான் என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ