மலையாள சினிமாவில் வெளியான கும்பளங்கி நைட்ஸ் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ஷேன் நிகாம். மேலும் சில தினங்களுக்கு முன்பாக வெளியான RDX என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்நிலையில் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் ஷேன் நிகாம். அந்த வகையில் தமிழில் ஷேன் நிகாம் அறிமுகமாகியுள்ள புதிய படத்திற்கு மெட்ராஸ்காரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வாலி மோகன்தாஸ் இயக்குகிறார். இதில் ஷேன் நிகாம் உடன் இணைந்து மெட்ராஸ், டார்லிங் 2 உள்ளிட்ட படங்களில் நடித்த கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா, பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை எஸ் ஆர் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சி எஸ் இதற்கு இசை அமைக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது மெட்ராஸ்காரன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பூஜையில் ஷேன் நிகாம், கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா, பாண்டியராஜன் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.