Homeசெய்திகள்சினிமாஷேன் நிகேம் நடிக்கும் மெட்ராஸ்காரன்.... படப்பிடிப்பு நிறைவு...

ஷேன் நிகேம் நடிக்கும் மெட்ராஸ்காரன்…. படப்பிடிப்பு நிறைவு…

-

ஷேன் நிகேம் நடிப்பில் உருவாகி வரும் மெட்ராஸ்காரன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவர் ஷேன் நிகேம். இவர் கிஸ்மத் என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் பல படங்களில் நடித்தாலும், கும்பலாங்கி நைட்ஸ் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இறுதியாக ஆர்டிஎக்ஸ் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். இத்திரைப்படம் மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அத்துடன் வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில், அவர் தமிழில் அறிமுகம் ஆக இருக்கிறார். ரங்கோலி படத்தை இயக்கிய வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் மெட்ராஸ்காரன். எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இவர் நடிக்கும் மெட்ராஸ் காரன் திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் கலையரசன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகை நிஹாரிகா கொனிடேலா, இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

https://x.com/i/status/1798228736296595723

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், மெட்ராஸ்காரன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ