Homeசெய்திகள்சினிமாஇந்தியன் 2வில் ஏ.ஆர். ரகுமானின் இசை இடம்பெறும்...... இயக்குனர் சங்கர் அறிவிப்பு!

இந்தியன் 2வில் ஏ.ஆர். ரகுமானின் இசை இடம்பெறும்…… இயக்குனர் சங்கர் அறிவிப்பு!

-

கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியாகிறது.இந்தியன் 2வில் ஏ ஆர் ரகுமானின் இசை இடம்பெறும்...... இயக்குனர் சங்கர் அறிவிப்பு! கடந்த 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் தான் இந்தியன் 2 படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு காரணம். அதே சமயம் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக்கங்களும் இருக்கின்றன. அதாவது இந்தியன் முதல் பாகத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த நிலையில் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. ஆனால் இந்தியன் 2 படத்தில் ஏ ஆர் ரஹ்மானுக்கு பதிலாக அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பதால் சங்கர் விருப்பப்பட்டு அவரை தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது. அனிருத்தின் இசையும் படத்திற்கு கை கொடுத்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான இந்தியன் 2 பட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இருப்பினும் சேனாதிபதிக்காக இந்தியன் முதல் பாகத்தில் ஏ ஆர் ரகுமான் அமைத்திருந்த இசை அனைவருக்கும் வைப் கொடுக்கும். எனவே ரசிகர்களின் அந்த ஏக்கங்களை சரி செய்ய இந்தியன் முதல் பாகத்தில் இடம் பெற்ற சேனாபதிக்கான  இசையை இந்தியன் 2 படத்திலும் வைத்திருக்கிறார்களாம். இதனை இயக்குனர் சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

MUST READ