சர்வானந்த், க்ரித்தி ஷெட்டி நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.நடிகர் சர்வானந்த், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் காதல்னா சும்மா இல்ல மற்றும் எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடைய பிரபலமானவர். அதன் பிறகு தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சர்வானந்த் 96 படத்தின் ரீமேக்கான ஜானு, ஸ்ரீஹாரம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து இவர் கணம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை. அதேசமயம் நடிகர் சர்வானந்த் மனமே எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பலே மஞ்சி ரோஜு படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கியிருக்கிறார். இதில் சர்வானந்த்துக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி அடித்துள்ளார். இந்த படமானது லண்டன் ஐதராபாத், போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். தற்போது இந்த படமானது வருகின்ற ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.