Homeசெய்திகள்சினிமாஅப்பாவின் அனுமதியின்றி திருமணம் செய்யும் சோனாக்சி?... தந்தையின் பதிலால் அதிர்ச்சி...

அப்பாவின் அனுமதியின்றி திருமணம் செய்யும் சோனாக்சி?… தந்தையின் பதிலால் அதிர்ச்சி…

-

பிரபல அரசியல் தலைவர் சத்ருகன் சின்ஹாவின் மகளும், நடிகையும் ஆவார் சோனாக்சி சின்ஹா. இவர் பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வருகிறார். இந்தி திரையுலகில், ஷாகித் கபூர், அர்ஜூன் கபூர், சல்மான் கான், ஆதித்யா ராய் கபூர் உள்பட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது இந்தியில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்
இறுதியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ஹீராமண்டி வெப் தொடரில் இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்தொடரில் சோனாக்சியின் நடிப்பு பாராட்டப்பட்டது.  தமிழில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் கோலிவுட் திரையுலகிற்கும் அறிமுகமானார். லிங்கா படத்திற்கு பிறகு அவர் தமிழில் திரைப்படம் ஏதும் நடிக்கவில்லை. விஜய் நடித்த கில்லி படத்தின் இந்தி ரீமேக்கிலும் அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், நடிகை சோனாக்சி சின்ஹா மற்றும் பிரபல நடிகர் ஜாகிர் இக்பால் காதலிப்பதாகவும், வரும் ஜூன் 23-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.  இந்நிலையில் திருமணம் குறித்த செய்திகளுக்கு பதில் அளித்த அவரது தந்தை, திருமணமா… எனக்கு தெரியாது, சோனாக்சி திருமணம் செய்துகொண்டால் அவரை ஆசிர்வதிப்பேன் என்று கூறினார். மேலும், திருமண செய்திகள் குறித்து பேசிய சோனாக்‌ஷி, அது உங்களுக்கு தேவை இல்லாதது, என்றார். இதனால் தன் தந்தையின் அனுமதியின்றி நடிகை சோனாக்சி காதல் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாரா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ