Homeசெய்திகள்சினிமாஅறுவை சிகிச்சைக்கு பின் உருக்கமான வீடியோ வெளியிட்ட சிவராஜ்குமார்!

அறுவை சிகிச்சைக்கு பின் உருக்கமான வீடியோ வெளியிட்ட சிவராஜ்குமார்!

-

- Advertisement -
kadalkanni

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சிவராஜ்குமார். அறுவை சிகிச்சைக்கு பின் உருக்கமான வீடியோ வெளியிட்ட சிவராஜ்குமார்!இவர் தமிழில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திலும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் இவர் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதன்படி கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சிவராஜ்குமார் அமெரிக்கா சென்றார். அங்குள்ள மியாமி புற்றுநோய் மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிவராஜ்குமாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்தது. இது தொடர்பாக சிவராஜ்குமாரின் மனைவி கீதா வீடியோ ஒன்றை வெளியிட்டு சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த சிவராஜ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “நான் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக பயந்தேன். ஆனால் ரசிகர்களும் உறவினர்களும் மருத்துவர்களும் என்னை வலிமையாக்கினர். சிகிச்சையின் போது எனக்கு துணையாக இருந்த என்னுடைய மனைவி கீதாவிற்கு நன்றி. என்னுடைய மனைவியும் என்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டார்கள். மியாமி புற்றுநோய் மையத்தின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களும் எனக்கு உறுதுணையாக நின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ