ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் மோகன் லால் சிவராஜ்குமார் வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பினும் இசையிலும் படம் உருவாகி உள்ளது. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் இது குறித்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ನಿಮ್ಮೆಲ್ಲರ ಪ್ರೀತಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು. Thank you for the love on #Jailer & Narasimha. In Cinemas near you@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @sunpictures @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi pic.twitter.com/SJ1zxgRlJq
— DrShivaRajkumar (@NimmaShivanna) August 11, 2023
அதில், “ஜெயிலர் திரைப்படம் அனைவரிடமும் நல்ல ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வாய்ப்பு அளித்ததற்காக சன் பிக்சர்ஸ், நெல்சன் சார் உள்ளிட்டோருக்கு நன்றி. குறிப்பாக ரஜினி சாருக்கு நன்றி. சூப்பர் ஸ்டார் ஆனா ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிப்பதற்கு பலரும் காத்திருக்கின்றனர் அதில் நானும் ஒருவன். படத்திற்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி” என்று பேசியுள்ளார்.
கர்நாடகாவிலும் ஜெயிலர் திரைப்படம் வெற்றிநடை போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.