Homeசெய்திகள்சினிமாநாளுக்கு நாள் ரசிகர்களின் பேராதரவை பெறும் சித்தார்த்தின் 'சித்தா'!

நாளுக்கு நாள் ரசிகர்களின் பேராதரவை பெறும் சித்தார்த்தின் ‘சித்தா’!

-

சித்தார்த் நடிப்பில் சித்தா திரைப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த்தின் எட்டாகி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை எஸ் யூ அருண் குமார் இயக்கியுள்ளார். இதில் சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியானது. குழந்தைகள் கடத்தல் பாலியல் வன்கொடுமை குறித்த கதைக்களத்தில் இந்த படம் மிகவும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தை இதுவரை இல்லாத புதிய பரிமாணத்தில் காணலாம். இப்படம் கமல்ஹாசன் உட்பட பல்வேறு தரப்பினர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதன்படி நாளுக்கு நாள் ரசிகர்களின் பேராதரவை சித்தா திரைப்படம் பெற்று வருகிறது. அந்த வகையில் 11.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். ஜெயம் ரவியின் இறைவன் மற்றும் ராகவா லாரன்ஸ் இன் சந்திரமுகி 2 திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் சித்தார்த்தின் சித்தா திரைப்படம் இனிவரும் நாட்களில் அதிக வசூல் பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ