நடிகர் சித்தார்த் கடைசியாக அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. அதைத்தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் எட்டு தோட்டாக்கள் மற்றும் குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சித்தார்த்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று சித்தார்த், பிரபல நடிகை அதிதி ராவ் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி தெரிவதும் நெருக்கமாக இருந்து புகைப்படம் எடுப்பதுமாக இருந்து வந்தனர். எனவே இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் சித்தார்த், அதிதி ராவ் இருவரும் இணைந்து தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாகவும் இவர்களின் திருமணம் குறித்த செய்திகள் உண்மையல்ல என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இருவரின் தரப்பிலும் திருமணம் குறித்து பரவி வந்த செய்திக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -