Homeசெய்திகள்சினிமாமீண்டும் காதல் கதையில் நடிக்கும் சித்தார்த்..... 'மிஸ் யூ' படத்தின் கதை இதுதான்!

மீண்டும் காதல் கதையில் நடிக்கும் சித்தார்த்….. ‘மிஸ் யூ’ படத்தின் கதை இதுதான்!

-

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். கடைசியாக சித்தார்த் நடிப்பில் சித்தா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்த சித்தார்த் சித்தா படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார்.மீண்டும் காதல் கதையில் நடிக்கும் சித்தார்த்..... 'மிஸ் யூ' படத்தின் கதை இதுதான்! அதைத்தொடர்ந்து கமலின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார் சித்தார்த். மேலும் சித்தார்த், குருதி ஆட்டம், எட்டு தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மீண்டும் காதல் கதையில் நடிக்கும் சித்தார்த்..... 'மிஸ் யூ' படத்தின் கதை இதுதான்!இதற்கிடையில் நடிகர் சித்தார்த் மிஸ் யூ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை மாப்ள சிங்கம் களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜசேகர் இயக்குகிறார். இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக அஸ்திகா ரங்கநாத் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பால சரவணன், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிப்ரான் படத்திற்கு அமைக்கிறார். கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். காதல் கலந்த ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. மீண்டும் காதல் கதையில் நடிக்கும் சித்தார்த்..... 'மிஸ் யூ' படத்தின் கதை இதுதான்!இந்நிலையில் இந்த படம் தொடர்பான சில தகவல்களை இயக்குனர் ராஜசேகர் சமீபத்தில் நடந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “இந்த படம் நகரத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதை. இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. ஏற்கனவே காதலித்து பிரிந்த பெண்ணை மீண்டும் சந்திக்கும் ஒரு ஆண் அவளை மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொள்வது தான் படத்தின் கதை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ