Homeசெய்திகள்சினிமாஅந்த மாதிரி கேரக்டரில் ஒருபோதும் நடிக்க மாட்டேன்..... சித்தார்த் பேச்சு!

அந்த மாதிரி கேரக்டரில் ஒருபோதும் நடிக்க மாட்டேன்….. சித்தார்த் பேச்சு!

-

- Advertisement -

நடிகர் சித்தார்த், பெண்களிடம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்வேன் என கூறியுள்ளார்.அந்த மாதிரி கேரக்டரில் ஒருபோதும் நடிக்க மாட்டேன்..... சித்தார்த் பேச்சு!தமிழ் சினிமாவில் நடிகர் சித்தார்த், சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, அவள், சித்தா என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதே சமயம் இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக மிஸ் யூ திரைப்படம் வெளியானது. அடுத்தது சித்தார்த் 40, டெஸ்ட், இந்தியன் 3 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் சித்தார்த். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் சித்தார்த்திடம், நீங்கள் ஏன் இன்னும் பெரிய ஸ்டார் நடிகராகவில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்த மாதிரி கேரக்டரில் ஒருபோதும் நடிக்க மாட்டேன்..... சித்தார்த் பேச்சு!அதற்கு அவர், “பெண்களை அடித்து கொடுமைப்படுத்துவது அவர்களை கட்டுப்படுத்துவது பெண்களின் இடையை கிள்ளுவது போன்ற காட்சிகளில் கதாபாத்திரங்களில் எப்போதும் நான் நடிப்பதில்லை. நான் பெண்களிடத்தில் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ளக் கூடியவன். எனவே அதை மீறும் வகையிலான கதாபாத்திரங்களிலும் காட்சிகளிலும் ஒருபோதும் நடிக்க மாட்டேன். அந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் எப்பொழுதோ நான் பெரிய ஸ்டாராகி இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ