Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2' படத்தில் நடித்ததற்காக என் குடும்பத்தினர் என்னை பாராட்டினர்.... சித்தார்த் பேச்சு!

‘இந்தியன் 2’ படத்தில் நடித்ததற்காக என் குடும்பத்தினர் என்னை பாராட்டினர்…. சித்தார்த் பேச்சு!

-

நடிகர் சித்தார்த் தற்போது எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படத்தை இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக சித்தார்த் 40 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தியன் 2 படத்தில் நடித்ததற்காக என் குடும்பத்தினர் என்னை பாராட்டினர்.... சித்தார்த் பேச்சு!இதற்கிடையில் இவர், மிஸ் யூ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகர் சித்தார்த் பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார். அப்போது செய்தியாளர்களில் ஒருவர், சித்தார்த்திடம் சித்தா படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நீங்கள் இல்லை ஏன்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சித்தார்த், “இந்தியன் 2 படம் உங்களுக்கு ஒரு படமாக தெரியவில்லையா?” என்று கேட்டார். அதற்கு மீண்டும் செய்தியாளர்கள், “இந்தியன் 2 படம் பெரிய அளவில் பேசப்படவில்லை” என்று கூறினார். இந்தியன் 2 படத்தில் நடித்ததற்காக என் குடும்பத்தினர் என்னை பாராட்டினர்.... சித்தார்த் பேச்சு!அதற்கு சித்தார்த், “நீங்கள் தான் பேசவில்லை. எங்கள் குடும்பத்தினர் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்ததற்காகவும் ஷங்கருடன் இணைந்து இரண்டாவது முறை பணியாற்றியதற்காகவும் என்னை பாராட்டினார்கள். நான் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் தமிழ் சினிமாவில் இல்லை என்று சொல்கிறீர்கள்” என்று கடுப்பாகிவிட்டார் சித்தார்த்.

MUST READ