சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள சித்தா படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சித்தார்த் கமல்ஹாசன், சங்கர் கூட்டணியின் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் டக்கர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
மேலும் சேதுபதி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சித்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சித்தாரத்திற்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். எட்டாகி என்றைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவிலும் திபு நினன் தாமஸ் இசையமைப்பிலும் இப்படம் உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது அதைத் தொடர்ந்து சமீபத்தில் கண்கள் ஏதோ எனும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாக இருப்பதாகவும் அதனை நடிகர் கார்த்தி வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.