Homeசெய்திகள்சினிமாசித்தார்த் குரலில் ‘காதோரம் அடி ஆலோலம்’ பாடல்.... வீடியோ இணையத்தில் வைரல்...

சித்தார்த் குரலில் ‘காதோரம் அடி ஆலோலம்’ பாடல்…. வீடியோ இணையத்தில் வைரல்…

-

இலங்கையில் நடைபெற்ற சந்தோஷ் நாராயணன் இசைக் கச்சேரி நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த், சித்தா பட பாடலை பாடி அசத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளர்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சந்தோஷ் நாராயணன். இவரது இசையில் காலா, கபாலி, மெட்ராஸ் என அனைத்து படங்களில் இடம்பெற்ற பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தன. இவரது இசையில் அண்மையில் வௌியான சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிதும் பாராட்டப்பட்டன.
இந்நிலையில், இலங்கையில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைக் கச்சேரி நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் சித்தார்த் உள்பட பல நட்சத்திரங்களும், பல்வேறு ரசிகர்களும் பங்கேற்றுள்ளனர். மேடை ஏறிய நடிகர் சித்தார்த், அவர் நடித்த சித்தா படத்தில் இடம்பெற்ற உனக்குத்தான் என்ற பாடலை பாடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக வைரலாகி வருகிறது.

சித்தார்த் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சித்தா. அருண்குமார் இயக்கியிருந்த இப்படத்தில் நிமிஷா விஜயன் நடித்திருப்பார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றதோடு, பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

MUST READ