Homeசெய்திகள்சினிமாபிறந்தநாள் கொண்டாடும் சித்தார்த்... சிறப்பு போஸ்டர் ரிலீஸ்...

பிறந்தநாள் கொண்டாடும் சித்தார்த்… சிறப்பு போஸ்டர் ரிலீஸ்…

-

நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்தியன் 2 திரைப்படம் புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் இளம் நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சித்தா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கோலிவுட்டின் பெரும் நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தை பெரிதும் பாராட்டினர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி அவர் நடித்து வருகிறார். இதற்கிடையே, தமிழ் சினிமாவில் சைக்கோ, காற்று வௌியிடை, ஹே சினாமிகா ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்திருந்த அதிதி ராவை காதலித்தும் வருகிறார். அண்மையில் இருவரின் திருமண நிச்சயமும் முடிந்தது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன. இதற்கு மத்தியில் இந்தியன் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்துள்ளார். கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில், சித்தார்த், விவேக், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படக்குழு சித்தார்த் பிறந்தநாளை முன்னிட்டு, புதிய போஸ்டரை வெளியிட்டு உள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

MUST READ