நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான “சில்க் ஸ்மிதா – Queen of the South” திரைப்படத்தை அறிவித்திருக்கிறது.
இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் தோற்றத்தில் சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் சில்க்கின் தோற்றத்தை அப்படியே வைத்திருக்கிறார். அவரது கண்கள் அனைவரையும் கவர்ந்திருழுக்கும். அதைப் போன்ற கண்கள் சந்திரிகா ரவிக்கும் இருப்பது விநோதமாகவும், கதாபாத்திரத்தை நேரில் பாத்தது போல் இருக்கிறது.
ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது. அவரது பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர்,
இதற்கு முன்பு இந்தியில் வித்யா பாலன் நடித்து டர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் ஒரு திரைப்பட,ம் வந்தது. இதுவும் சில்க்கின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த படத்தில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது.
நிஜ வாழ்க்கையில் அவரது காலத்து நடிகைகளை விட அதிக உயரத்தில் இருந்தவர் சில்க். அவரை ஆபாச கோலத்தில் பார்த்துப் பார்த்தே மக்கள் தவறான முறையில் சில்க் ஸ்மிதாவை சித்தரித்து விட்டனர். ஆனால் உண்மையில் சில்க் ஸ்மிதா குழந்தை மனம் கொண்டவர். அதேசமயம் மிகுந்த தைரியசாலி, துணிச்சல்மிக்கவர், எதற்கும் அஞ்சாதவர். தான் செய்வது சரி என்று நினைத்தால் அதை துணிச்சலாக செய்வார். யார் என்ன நினைத்தாலும், பேசினாலும் அது பற்றி அவர் கவலைப்பட மாட்டார். தான் செய்யும் செயலுக்காக அவர் வெட்கமோ, கூச்சமோ படமாட்டார். மிகுந்த வெளிப்படையானவர் சில்க் ஸ்மிதா. தன்னைத் தேடி வந்த எந்த வாய்ப்பையும் விடாமல் பற்றிக் கொண்டு முன்னேறும் பக்குவம் உடையவராக இருந்தார். ஒவ்வொரு நிமிடத்தையும் முழுமையாகவும், திருப்திகரமாகவும் வாழ வேண்டும் என்று எண்ணியவர்.
டர்டி பிக்சர்ஸ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
குளியல் காட்சியில் வித்யா பாலன் நடித்து விட்டு வந்த சில நிமிடங்களில், அவரது உடம்பில் லேசான நமநமப்பு போன்று உணர்ந்தார். ஆரம்பத்தில் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்ட வித்யா பாலனுக்கு கொஞ்ச நேரத்தில் உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பாக மாறியது. இதனால் பதறிப் போன வித்யா, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் காண்பித்துள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத சோப் அல்லது கெமிக்கல் கலந்து தண்ணீரால் தான் இந்த பிரச்சினை என்று கூறியிருக்கின்றனர். இதன்பின்னர் வித்யா பாலனுக்கு சிகிச்சை அளித்து அவரை அனுப்பி வைத்தனர்.
படத்தில் இன்னும் சில குளியல் காட்சிகள் இருக்கிறதாம். ஆகையால் இனி எடுக்கப் போகும் குளியல் காட்சிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க மினரல் வோட்டரை பயன்படுத்தியது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தச் சூழலில் சில்க் ஸ்மிதா குறித்து நடிகை ஜெயமாலினி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் பேசியுள்ள அவர், சில்க் தனது வாழ்க்கையில் செய்த பெரிய தவறு ஒன்று இருக்கிறது. அது தான் காதல். காதலிக்கலாம் தவறில்லை. ஆனால் பெற்றோரை ஒதுக்கி வைக்கக்கூடாது. ஆனால் அவர் தனது தாயையும், சகோதரனையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவரை மட்டுமே நம்பி வாழ்ந்தார். உறவினர்களை பக்கத்தில் வைத்திருந்திருக்க வேண்டும். அவர்கள் நமது பணத்தை பாதி தின்றாலும் கொஞ்சமாவது நமக்காக வைப்பார்கள். ஆனால் ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள்; நமக்கு உறவினர்கள் ஆதரவு இல்லை என்று தெரிந்துகொண்டால் ரொம்பவே ஏமாற்றுவார்கள்.
அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும் ஏமாற்றப்பட்டு அதனால் ஏற்படபட்ட மன அழுத்தத்தால் பலியானார் என்று கூறியுள்ளார். சில்க் ஸ்மிதா பிறந்த நாளான டிசம்பர் 2ம் தேதி இன்று சில்க் பற்றிய நினைவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.