Homeசெய்திகள்சினிமாகாதலில் வெள்ளி விழா கொண்டாட்டம்..... 25 ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடிய அஜித் - ஷாலினி!

காதலில் வெள்ளி விழா கொண்டாட்டம்….. 25 ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடிய அஜித் – ஷாலினி!

-

நடிகர் அஜித்- ஷாலினி தம்பதி, காதலிக்க தொடங்கி 25ஆவது ஆண்டு நிறைவு தினத்தை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் அமர்க்களம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகை ஷாலினி அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் சரண் இந்த படத்தை இயக்கியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.காதலில் வெள்ளி விழா கொண்டாட்டம்..... 25 ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடிய அஜித் - ஷாலினி! அதே சமயம் அமர்களம் படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஷாலினிக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் நடிகர் அஜித் அவரை பாசமாக பார்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஷாலினிக்கும் அஜித்துக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. அதைத்தொடர்ந்து 2000 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் அஜித் – ஷாலினி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் அஜித் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். ஷாலினி நடிப்பில் இருந்து விலகி விட்டதாகவும் தான் இனிமேல் நடிக்க மாட்டேன் எனவும் அறிவித்தார். இந்நிலையில் அஜித் ஷாலினி இருவரும் காதலிக்க தொடங்கி 25 வருடங்களை நிறைவடைந்துள்ளது. இத்தினத்தையொட்டி சென்னையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ அஜித் – ஷாலினி இருவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

https://www.instagram.com/reel/C4m5ZF-BswO/?utm_source=ig_web_button_share_sheet

இவர்கள் கேக் வெட்டிய சமயத்தில் அமர்க்களம் படத்தில் இடம்பெற்று இருந்த அவர்களுக்கு பிடித்தமான பாடலான உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்ற பாடல் ஒலிப்பது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ