Homeசெய்திகள்சினிமாநீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகிறாரா சிம்ரன்?

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகிறாரா சிம்ரன்?

-

தளபதி விஜய்க்கு, சிம்ரன் ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ரிலீசுக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்றைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். இது குறித்து அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியானது. அதே சமயம் வெங்கட் பிரபுவும் ஸ்கிரிப்ட் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் இதன் அடுத்தடுத்த அப்டேட்டுகளாக விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஜோதிகாவிற்கு பதிலாக நடிகை சிம்ரன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சிம்ரன் துள்ளாத மனமும் துள்ளும், ஒன்ஸ்மோர், பிரியமானவளே,உதயா
உள்ளிட்ட படங்களில் விஜய் உடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக அபர்ணாதாஸ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ