நடிகர் சிம்பு பத்து தல படத்திற்கு பின் தனது 48வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். இதனை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அதே சமயம் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார். பீரியாடிக் படமாக உருவாக இருக்கும் இந்த படமானது அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாராக இருக்கிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் சிம்பு, கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
#SilambarasanTR serving food for the #ThugLife crew members ❤️❤️pic.twitter.com/CDpv2KZaS7
— AmuthaBharathi (@CinemaWithAB) June 4, 2024
அதாவது கமலுக்கு மகனாக சிம்பு நடிக்கிறார் என்று செய்திகள் பரவி வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு புது டெல்லி, ராஜஸ்தான், சென்னை போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு தக் லைஃப் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.