சிம்பு நடிக்கும் புதிய படம் கொடுத்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இந்திரஜா, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஈகோ கிளாஸ் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான் ராம்குமார் பாலகிருஷ்ணன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சிம்புவிடம் கதை சொன்னதாக செய்திகள் வெளியானது. தற்போது நடிகர் சிம்புவிற்கு, ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை பிடித்துப் போனதாகவும் அவருடன் படம் பண்ண சிம்பு ஓகே சொல்லிவிட்டதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் சிம்பு, தக் லைஃப் படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருந்தார். எனவே சிம்பு, ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்திற்கு பின்னர் தான் அஸ்வத் மாரிமுத்து படத்தில் நடிப்பார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.