கடந்த 2023 ஆம் ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் 2018 எனும் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். இந்தப் படம் கேரளாவை தாண்டியும் தமிழ்நாடு போன்ற மற்ற மாநிலங்களிலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. எனவே அடுத்ததாக ஜூட் ஆண்டனி என்ன படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லைக்கா நிறுவனத்துடன் ஜூட் ஆண்டனி கைகோர்க்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இதற்காக ஜூட் ஆண்டனிக்கு அட்வான்ஸ் பணமும் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லையாம். இந்நிலையில் தான் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இயக்குனர் ஜூட் ஆண்டனி வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷிடன் கதை ஒன்றை சொல்லியதாகவும் அந்த கதை ஐசரி கணேஷுக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றனர். எனவே ஐசரி கணேஷ், இதைப் பற்றி நடிகர் சிம்புவுடன் பேச சிம்புவும் படத்திற்கு உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஆகையால் அடுத்ததாக ஜூட் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. அதே சமயம் நடிகர் சிம்பு இன்னும் சில படங்களில் கமிட் ஆகி இருக்கும் நிலையில் அடுத்ததாக எந்த படத்தில் நடிப்பார் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.