Homeசெய்திகள்சினிமாசிறந்த நடிகைக்கான விருதை வென்ற சிம்பு பட நடிகை!

சிறந்த நடிகைக்கான விருதை வென்ற சிம்பு பட நடிகை!

-

- Advertisement -

நடிகை மஞ்சிமா மோகன் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றுள்ளார்.சிறந்த நடிகைக்கான விருதை வென்ற சிம்பு பட நடிகை!

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அந்த வகையில் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு 2015ல் வெளியான ஒரு வடக்கன் செல்பி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழிலும் கவனம் செலுத்திய இவர், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார்.சிறந்த நடிகைக்கான விருதை வென்ற சிம்பு பட நடிகை! அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களும் நடித்து வந்த இவர் தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தால் மஞ்சிமா மோகன் சமீபத்தில் வெளியான சுழல் 2 வெப் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதன்படி இந்த வெப் தொடரில் இவர் நாகம்மா என்ற கதாபாத்திரத்தில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகைக்கான விருதை வென்ற சிம்பு பட நடிகை!வெப் தொடர் முழுவதும் இவருடைய கதாபாத்திரம் இடம் பெறவில்லை என்றாலும் வலுவான கதாபாத்திரமாக அமைந்திருந்தது. எனவேதான் மஞ்சிமா மோகனுக்கு சுழல் 2 வெப் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சிறந்த நடிகைக்கான ஓடிடி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது டெக்னோபஸ் 25வது ஆண்டு விழாவில் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ