அஜித்தின் 63வது படமாக குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி.வி. பிரகாஷின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இப்படமானது 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து தரமான டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அடுத்தது இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாகி வருகிறது. அதாவது ஏற்கனவே இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில், யோகி பாபு, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகை சிம்ரன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகை ஷாலினி கேமியோ ரோலில் தோன்றுவார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் நடிகர் சிம்புவும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என சமூக வலைதளங்களில் பல தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.
ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வந்த சிம்புவின் ஒரு கேரக்டரை தான் குட் பேட் அக்லி படமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார் என்பது போன்ற தகவல்கள் சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே நடிகர் சிம்பு இப்படத்தில் நடித்திருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.