பிரபல நடிகர் சிம்பு, கிருஷ்ணா இயக்கிய பத்து தல படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது 48வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார்.
இப்படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ளது.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இது தொடர்பாக கீர்த்தி சுரேஷின் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சிம்பு இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து வருவதாகவும், லண்டனில் சில தற்காப்பு கலைகளை கற்று வருவதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
தற்போது இந்த படத்தின் முதல் கட்ட பணிகளான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இதன் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்று திரைப்படமாக உருவாக உள்ள ‘STR 48‘ படத்தில், சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக ஆரம்பத்திலேயே பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவியது. ஏற்கனவே சிம்பு, மன்மதன் திரைப்படத்தில் அண்ணன், தம்பியாக இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சிலம்பாட்டம் திரைப்படத்தில் அப்பா, மகனாக இரட்டை இடங்களில் நடித்திருந்தார்.
தற்போது ஹீரோவாகவும், வில்லனாகவும் ஒரே படத்தில் நடிக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமில்லாமல், கமல்ஹாசன் மற்றும் சிம்பு கூட்டணியில் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசனுக்கு, சிம்பு வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் குறிப்பிடத்தக்கது.