Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் சிம்புவின் 48வது படம்.... ஷூட்டிங் எப்போது?

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் சிம்புவின் 48வது படம்…. ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

நடிகர் சிம்பு கடைசியாக பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அடுத்ததாக தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் சிம்புவின் 48வது படம்.... ஷூட்டிங் எப்போது?இந்த படத்தை துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். இதனை ராஜ்கமன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார். மேலும் STR48 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் பீரியாடிக் படமாக உருவாக இருக்கிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்காக நடிகர் சிம்பு வெளிநாடுகளுக்கு சென்று பல பயிற்சிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல் தீவிரமாக ஒர்க் அவுட் செய்து தனது லுக்கை மாற்றி இருக்கிறார்.
ஆனால் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தற்போது இந்த படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் சிம்புவின் 48வது படம்.... ஷூட்டிங் எப்போது?இதற்கிடையில் நடிகர் சிம்பு, தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். எனவே STR48 திரைப்படம் கைவிடப்பட்டதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் 2வது வாரத்தில் தொடங்கப்படும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ