தனது முதல் படம் வெளியான போது முதன்முதலாக சிம்பு தான் அழைத்து பாராட்டியதாக சசிகுமார் தெரிவித்துள்ளார்.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அயோத்தி‘ திரைப்படம் பெரும் அளவிற்கு வரவேற்பு பெற்றுள்ளது. ஓடிடி-யில் வெளியான பிறகு படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தை பார்க்கும் அனைவரும் படத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
மதங்களைத் தாண்டி மனித நேயம் போற்றுவோம் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் மக்கள் மனதை வென்றது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் 50-வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் சசிகுமார், படத்தின் நடிகர்கள், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சசிகுமார் “தான் முதன்முதலாக இயக்கிய சுப்பிரமணியபுரம் திரைப்படம் வெளியான போது நடிகர் சிம்பு தான் தன்னை அழைத்து பாராட்டிய முதல் நடிகர். அயோத்தி படம் வெளியான போதும் சிம்பு அழைத்து பாராட்டினார்” என்று சசிகுமார் தெரிவித்துள்ளார்