நடிகர் சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். ஆரம்பத்தில் இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படம் சிம்புவிற்கு 48வது படமாக மாறி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு தவிர திரிஷா, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ராஜஸ்தான், புதுச்சேரி போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதேசமயம் இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சிம்பு விரைவில் தக் லைஃப் படத்தின் முடிக்க உள்ளாராம். அதன்படி சிம்புவின் பகுதிகள் நிறைவடைய இன்னும் எட்டு நாட்கள் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.