Homeசெய்திகள்சினிமா'சித்தா படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்'.... பூங்கொத்து அனுப்பி பாராட்டிய சிம்பு!

‘சித்தா படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்’…. பூங்கொத்து அனுப்பி பாராட்டிய சிம்பு!

-

சித்தார்த் நடிப்பில் சித்தா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ் யு அருண்குமார் இயக்கியுள்ளார். சித்தார்த்தின் எட்டாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இதில் சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் நடித்துள்ளார். குழந்தை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவான இந்த படம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. கமல்ஹாசன் உட்பட பலரும் சித்தா பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு சித்தா பட குழுவினருக்கு பூங்கொத்து ஒன்றை பரிசளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி, ” உங்களின் வெற்றிக்காகவும் பார்வையாளர்களுக்கு விதிவிலக்கான கதையை கொடுத்ததற்காகவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

MUST READ