Homeசெய்திகள்சினிமாசர்ச்சையில் சிக்கிய பாடகி சித்ரா... வலுக்கும் கண்டனம்....

சர்ச்சையில் சிக்கிய பாடகி சித்ரா… வலுக்கும் கண்டனம்….

-

- Advertisement -
பாடகி சித்ரா பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

 

தமிழ் திரையுலகை தாண்டி அனைத்து மொழிகளிலும் தற்போது முன்னணி பாடகியாக வலம் வருபவர் சித்ரா. சின்னக்குயில் சித்ரா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுவார். கடந்த 1985-ம் ஆண்டு வெளியான கே பாலச்சந்தர் இயக்கிய சிந்து பைரவி படத்தில் வந்த நான் ஒரு சிந்து என்ற பாடல் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் பாடகி கே.எஸ்.சித்ரா. சுமார் 38 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் சித்ரா தமிழில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடல்களை பாடி இருக்கிறார். அதேபோல, தமிழ் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒடியா, பெங்காளி, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது சான்ஸ்கிரிட் மற்றும் படுகா என அனைத்து மொழிகளிலும் அவர் பாடல்கள் பாடி உள்ளார்.

இதனிடையே, தற்போது அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக சித்ரா பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில், அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யும் அன்று, வீடு முழுவதும் திருக்கார்த்திகை போல தீபம் ஏற்ற வேண்டும். ராம மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சிலர் பாடகி சித்ராவுக்கு ஆதரவு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ