பாடகி ராஜலட்சுமி நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி மிகவும் பிரபலமானார். சினிமாவில் பல பாடல்கள் பாடினார். இந்நிலையில் கதாநாயகியாக புதிய படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை ஜே ஆர் ஜி புரடக்சன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரித்துள்ளார். படத்திற்கு ‘லைசென்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. மேலும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
பாடகியாக இருந்த ராஜலட்சுமி இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆகிறார். எனவே அவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.