சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி கங்குவா எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படக்குழுவினர் கங்குவா படம் 2000 கோடி வசூல் செய்யும் எனவும் அனைவரும் வாயை பிளந்து பார்க்கப் போகிறார்கள் எனவும் கூறியிருந்தனர். இது தொடர்பாக ரசிகர்கள் பலரும் கங்குவா படத்தினை படக் குழுவினையும் ட்ரோல் செய்து வருகின்றனர். அடுத்தது நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா, தனது சமூக வலைதள பக்கத்தில் கங்குவா பட எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி கங்குவா படத்திற்கு எதிராக திட்டமிட்டே அவதூறு பரப்புவதாக தெரிவித்திருந்தார். அதாவது அரை மணி நேரம் சரியாக இல்லாததற்கு 3 மணி நேர படத்தை குறை சொல்வதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் பெண்களைப் பின் தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்றிருக்கும் படங்களுக்கும், மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் வருவது ஏன்? என்றும் கங்குவா படக்குழு பெருமையுடன் இருங்கள். எதிர்மறையாக விமர்சிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்காக எதுவும் செய்யவில்லை என்று பதிலடி கொடுத்திருந்தார்.
#Suchitra‘s vanmam mode against Suriya and #Jyothika.😡
Full video ▶️#Kanguva | #Suriya | #Jyotika— Tharani ᖇᵗк (@iam_Tharani) November 18, 2024
இந்நிலையில் ஜோதிகாவை விமர்சித்து, பாடகி சுசித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஜோதிகாவை மிகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். பேரழகன் பிச்சைக்காரி, படிப்பறிவு இல்லாத கழுதை இன்னும் பல இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி ஜோதிகாவை விமர்சித்துள்ளார் சுசித்ரா. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் ரசிகர்கள் பலரும் ஜோதிகாவிற்கு ஆதரவு தெரிவித்து சுசித்ராவை திட்டி தீர்த்து கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.