Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி மகள் தற்கொலைக்கு காரணம் இதுதான்... சுசித்ரா பதிலால் வெடித்த சர்ச்சை... விஜய் ஆண்டனி மகள் தற்கொலைக்கு காரணம் இதுதான்… சுசித்ரா பதிலால் வெடித்த சர்ச்சை…
- Advertisement -

கோலிவுட் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. இவர் தமிழில் பல ஹிட் பாடல்களை பாடி புகழ் பெற்றவர் ஆவார். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இவர் பாடல்கள் பாடி இருக்கிறார். அதுமட்டுமன்றி டப்பிங்கும் கொடுத்துள்ளார். இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பாக, ‛சுச்சி லீக்ஸ்’ விவகாரத்தில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சுச்சி லீக்ஸ் என்ற பக்கத்தில் இருந்து ஏராளமான சினிமா தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின

இது திரையுலகில் பெரும் சர்ச்சைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த பிரச்சனைக்கு பிறகு சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்தார். அதுமட்டுமன்றி இன்று வரை சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல், ஆர்ஜேவாக அவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி பேட்டியில் அவர்பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், நடிகர் தனுஷூம், ஐஸ்வர்யாவும் விவாகரத்திற்கு முன்பே, ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இல்லை, ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருந்ததாக கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திரைப்பிரபலங்கள் பலரைப் பற்றி பேசிய சுசித்ரா, விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் தற்கொலை குறித்தும் பேசியிருக்கிறார். விஜய் ஆண்டனியைப் போலவே மீராவும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் எனவும் சுசித்ரா தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.